தொடர்புக்கு

 
 
     
         
 

பதிவுகள்

அகிலத்திரட்டில் ராமாயணம்

அகிலத்திரட்டில் மஹாபாரதம்

அகிலத்திரட்டில் நரசிம்ம அவதாரம்

அகிலத்திரட்டில் கந்தன் அவதாரம்

அகிலத்திரட்டில் மாகாளி கதை

  பதிவுகள்  

எதிர்காலத்தில் ஆய்வு செய்பவர்கள் இது உண்மை என்று அவர்கள் நூலில் பதிவு செய்வார்கள்..............

திரு. விவேகானந்தன் அவர்களே................உங்கள் நூலான கொட்டங்காடு ஏட்டில் வைகுண்டர் வரலாறு என்ற நூலில் பக்கம் – 103 ல் முத்துக்குட்டி சாமி சமாதி அடைந்த பிறகே சாஸ்த்தான் கோவில் விளையில் கோவில் எழுந்தது என்பது பற்றி A.S.No. 95/1051 of Sadar Zila Civil Court, Trivandrum. என்னும் மேல் முறையீட்டு வழக்கில் கூறுவதாவது................ முத்துக்குட்டி என்னும் சாணான் இனத்தார் ஒருவர், அவரது கடைசி காலத்தில் இவ்வுலக ஆசைகளைத் துறந்து, யாசித்து வாழ்ந்து வந்தார்......... 1026 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு, அவரது சமாதி வைக்கப்பட்ட இடம் அவரது நண்பர்களாலும், பக்தர்களாலும் அதிகமாகப் போற்றப்பட்டது...... காலப்போக்கில், அவர்களின் அதிக அளவான பக்தி முத்துக்குட்டியை புனிதராக்கி, நாராயணசாமியாகத் தீர்மானிக்க வைத்தது.................. உடனடியாக அவரது கல்லறை நாராயணசாமி கோவிலாக மாறியது............ சாணார் இனத்து மக்கள் எல்லாப் பக்கத்திலிருந்தும் வந்து குவியலானார்கள்.......... மக்களிடமிருந்து நிதிக்குவியலே, சகல வசதியுடன் கோவில் எழுப்பப் பட்டது.............. மேலும் பக்கம் 104 ல் வழக்கு O.S.No. 80/1110 வழக்கு Page 16 இல் 1026 ல் முத்துக்குட்டி சாமி சமாதிக்குப் பிறகுதான் நாராயணசாமி கோவில் எழுப்பப் பட்டது. என்பது எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்டது.............. என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.......... ஆனால் அகிலத்திரட்டில் வைகுண்டர் தனது பொன்னுடலை உதிர்க்கும் காலத்தில் சுவாமிதோப்பு வந்ததாக முத்துக்குட்டி அகிலத்திரட்டு கூறவில்லை............. உங்கள் ஆய்வு நடுநிலையாக இருந்திருந்தால் வழக்கில் சொல்லப் பட்டதிற்கும், முத்துக்குட்டி அகிலத்திரட்டிற்கும் சம்மந்தமே இல்லை என்று கூறியிருக்க வேண்டும்.............. இதற்கு மாறாக புதிய ரெக்காடை உருவாக்கியுள்ளீர்............. உங்களின் “கொட்டங்காடு ஏடு வைகுண்டர் வரலாறு” என்ற நூலில் பக்கம் 104 –ல் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளீர்கள்................. வைகுண்டர் வைகுண்டம் ஏகியபோது, மூலக்குண்டப்பதி என்னும் அம்பலப்பதியில் தமது பொன்னுடலை உதிர்த்ததாகவும், அச்சமயம் அவர் சடைவாறச் சாய்ந்திருந்த அரசமரம் இரண்டாகப் பிளந்ததாகவும், அவரது பொன்னுடலை தாமரைக்குளம் ஊர் மக்கள் தாமரைப்பதி இருக்கும் இடத்தில் சமாதி வைக்க முயன்றதாகவும், அதை எதிர்த்து நின்று போராடிய அனந்தகுட்டி நாடார் வைகுண்டரின் பொன்னுடலைச் சிப்பாய்களின் உதவியுடன் கைப்பற்றி, வைகுண்டர் தவம் இருந்த இடத்தில், பூவண்டரின் அனுமதியுடன் அப்பொன்னுடலைப் பொதிந்து கோவில் கட்டியதாகவும், ஒரு வரலாற்று செய்தியை பலர் கூறுவதுண்டு. அச்செய்தி உண்மையாக இருந்தது............... ஒருவேளை அன்றைக்குத் தாமரைகுளம் ஊர் மக்களால் பொன்கூட்டு உடல் கைப்பற்றப் பட்டிருந்தால், இன்றைக்கு அய்யா தவமிருந்த பூவண்டர் தோப்புப் பகுதி எது என்று தேடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்............ ஒரு வேளை அன்றைக்கு அனந்தக்குட்டி நாடார் பொன் கூட்டைக் கைப்பற்றி அய்யா தவம் இருந்த பகுதியில் மணிக் கோவில் கட்டாது இருந்திருந்தால் பொதுக்குட்டியின் குடும்பத்தாருக்கு “ அடுத்தாரைக் காப்பதற்காய்ப் பூவண்டன் தோப்பதிலே அமர்ந்து இருந்தேன் அய்யோ சிவனே அய்யா [சாட்டுநீட்டோலை] என்று அய்யா கூறும் பூவண்டன் தோப்பு இனமாக [இனாம் என்று கூறும் O.A.No.23/1979 ஐயும் பார்க்க] கிடைத்திருக்காது...... இவை வேலாண்டி வாத்தியாராலும் மாற்றமுடியாத வரலாற்று உண்மைகள்................... அன்பரே “ அடுத்தாரைக் காப்பதற்காய்ப் பூவண்டன் தோப்பதிலே அமர்ந்து இருந்தேன் அய்யோ சிவனே அய்யா [சாட்டுநீட்டோலை] என்பது அவர் சுவாமிதோப்பிலே வசிக்கும் போது சொல்லப் பட்டது........... அவர் வைகுண்டம் சென்ற பின்பு சொல்லப் பட்டது அல்ல............. பொன்மேனிக்கூட்டுக்கான பதிவும் அது அல்ல............ எப்படியாவது வலிந்து சென்று பொருள் கூறுவது உங்களுக்கு நிகர் நீங்கள் தான்............................... அன்பரே உங்களின் அகிலத்திரட்டு அம்மானை மூலமும், உரையும் பாகம் -2ல் பக்கம் 404 ல் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தீர்கள்......................... வைகுண்டர், மூலகுண்டர் பதியில் இருந்து தாமரை பதி திரும்புவது பற்றி இந்த ஏடு வெளிப்படையாக கூறவில்லை........... ஆனால் இது பற்றி கொட்டங்காடு ஏடு “ ஆராதனையாய் அவர் ஒரு ஆட்டம் ஆடிச் சீரான சான்றோர்க்கு சொல்லுவார் வைகுண்டரும் நன்று மக்காள் இன்று நாம் எல்லோரு கூடி பண்டு நான் தவசிருந்த பதி தாமரை ஊரில் இன்று போக விஞ்சை உண்டு என் கூடி வாரும் என்றார் அன்று மூலப் பதியை விட்டு ஆதிசாதி எல்லாம் ஒன்றாக கூடி உடையோன் பின்னே நடந்தார்” என்று வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளீர்கள்........... ஆக உங்கள் கருத்துப்படி முத்துக்குட்டி தான் தெய்வமாக வந்ததாக எழுதப்பட்ட அகிலத்திரட்டில் பொன்மேனிக்கூடு சுவாமிதோப்பில் வைப்பதற்கு இடமில்லை , கொட்டங்காடு ஏட்டில் செய்தி இருப்பதாக முன்பு கூறுனீர்கள்,.... இப்பொழுது கூறுவதற்கு மனமில்லை..... பொன்மேனிக்கூடு சுவாமிதோப்பில் இருப்பதற்கு ரெக்காடும் தேவைப்படுகிறது..................... நீங்கள் செவிவழி செய்தியை கூறி அனந்தக்குட்டி நாடார் பொங்கூட்டைக் கைப்பற்றியதாக கொட்டங்காடு ஏட்டில் வைகுண்டர் வரலாறு என்ற நூல் மூலமாக ரெக்காடு ஆக்கி உள்ளீர்கள்............... இனி இதை எதிர்காலத்தில் ஆய்வு செய்பவர்கள் இது உண்மை என்று அவர்கள் நூலில் பதிவு செய்வார்கள்.............. இப்படிதானே பொய் உண்மையாகி காலகாலமாக உலாவிக்கொண்டிருக்கிறது.................. உங்கள் ஆய்வு நடுநிலையாக இருந்திருந்தால் வழக்கில் சொல்லப் பட்டதிற்கும், முத்துக்குட்டி அகிலத்திரட்டிற்கும் சம்மந்தமே இல்லை என்று கூறியிருக்க வேண்டும்.............. இதற்கு மாறாக புதிய ரெக்காடை உருவாக்கியுள்ளீர்........... .https://www.facebook.com/mahavishnuvaikundar.

 
     

சுவாமிதோப்பு வெறும் குடும்ப கோவிலாக மட்டும் இருந்தால் நான் ஒன்றும் சொல்ல முடியாது........ஆனால் தமிழக அரசு விருப்ப விடுமுறை விடுகின்ற ஒரு தலமாக சுவாமிதோப்பு ஆகிவிட்டது..............

 
 Visitors  : 3993