பதிவுகள்

அகிலத்திரட்டில் ராமாயணம்

அகிலத்திரட்டில் மஹாபாரதம்

அகிலத்திரட்டில் நரசிம்ம அவதாரம்

அகிலத்திரட்டில் கந்தன் அவதாரம்

அகிலத்திரட்டில் மாகாளி கதை

  பதிவுகள்  

சுவாமிதோப்பு வெறும் குடும்ப கோவிலாக மட்டும் இருந்தால் நான் ஒன்றும் சொல்ல முடியாது........ஆனால் தமிழக அரசு விருப்ப விடுமுறை விடுகின்ற ஒரு தலமாக சுவாமிதோப்பு ஆகிவிட்டது..............

என் அன்புக்கொடி உடன் பிறப்புக்களே.................. மற்றும் ஓர் மனதின் தோன்றல்கள் மூலமாக உங்களிடம் கருத்து பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.......... சமிபத்திய பதிவுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்......... “ அய்யா விதவைக்கு வாழ்வு கொடுத்தார்” இது போன்ற பேச்சை அடிகளார் நாகராஜாதிடலில் வைத்து பேசினதை நான் கேட்டேன்.[Record கூட வைத்திருக்கிறேன்]................. அவருக்கு அய்யா என்றால் முத்துக்குட்டி............ எனக்கு அய்யா என்றால் மகாவிஷ்ணு.............. சுவாமிதோப்பு வெறும் குடும்ப கோவிலாக மட்டும் இருந்தால் நான் ஒன்றும் சொல்ல முடியாது........ஆனால் தமிழக அரசு விருப்ப விடுமுறை விடுகின்ற ஒரு தலமாக சுவாமிதோப்பு ஆகிவிட்டது.............. எனவே சுவாமிதோப்பு ஒரு பொதுவான விசயம்............ நான் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது பதிக்கு சென்று வந்தால் கூட உடனே சுவாமிதோப்புக்கு சென்று வருகிறீர்களா?....... என்று கேட்கும் அன்பர்கள் உண்டு.............. சுவாமிதோப்பு நான் நெற்றியில் இடும் நாமத்தின் அடையாளமாகவே உலகில் உள்ளது.............அது மிகவும் மகிழ்ச்சியானதாகவே உள்ளது................ ஆனால் என் அடையாளம் முத்துக்குட்டியை வணங்கும் நபராகவே உள்ளது........... இதை தவிர்த்து எனது அடையாளம் உலகில் இல்லை.. முத்துக்குட்டி சாமி கடலுக்குள் போனார்............ மூன்று நாள் கழித்து கரைக்கு வந்தார்........... தவம் புரிந்தார் கடவுளாகி விட்டார்..............சாதிகொடுமக்காகப் போராடினார், தோள் சீலை போராட்டம் நடத்தினார், நாடார் குலத்தை மேன்மை படுத்தினார், திருவிதாங்கூர் மன்னனை நீசன் என்ரு வர்னித்தார்............இப்படி பலவிதமான பதிவுகள்................ நாடார் குல சாமி என்ற பெயரும் உண்டு. உண்மையில் அகிலத்திரட்டின் படி திருவிதாங்கூர் மன்னனிடம் வைகுண்டர் வாதாடவில்லை மவுனமாகவே இருந்தார்..............அகிலத்திரட்டு படித்தவர்க்கு தெரியும். நீங்கள் நாடார் சங்கங்களை பதிவுகளில் நாடார்களில் பெரிய மனிதர்கள் யார்?............ யார்?............. என்ற வரிசையில் முத்துக்குட்டியும் உண்டு........... சரி அகிலத்திரட்டு என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தால், பல குழப்பம், கலப்படம்........... சரி அந்த கலப்பட அகிலத்திரட்டில் கூட கடலுக்குள் போன முத்துக்குட்டி தெச்சணத்துக்கு வரவில்லை.............. நாராயணர் வருகிறார்....... இப்படி உண்மை இருக்கையில் ,,, முத்துக்குட்டியின் வாரிசுகள் எப்படி வந்தது............ இவர்கள் முத்துக்குட்டியின் வாரிசு, சுவாமிதோப்பு பதி முத்துக்குட்டிக்கு உரியது, ஆதலால் முத்துக்குட்டியின் வாரிசுகள் அதை நிர்வாகிக்கிறார்கள்............. வழக்குகளில் பாகப்பிரிவினை வழக்கும் உண்டு........... அன்பர்களே முத்துக்குட்டி ஐந்து பதிகளை தோற்றிவித்தார். பல நிழல்தாங்கல்களை தோற்றிவித்தார், என்று நூல் பதிவும் உண்டு........... நண்பர் நா. விவேகானந்தன் அவர்களின் அகிலத்திரட்டு அம்மானை மூலமும், உரையும் என்று நூலில் தெளிவாக உள்ளது.......... உண்மையில் இவர்கள் முத்துக்குட்டியின் வாரிசுகள் என்றால் முட்டப்பதி, தென்தாமரைகுளத்து பதி, அம்பலப் பதி, பூப்பதி , வாகைபதி , ஆகிய பதிகளுக்கும் ,மற்றும் செட்டிகுடியுருப்பு , அகத்தீசுவரம் , பாலவூர் , சுண்ட விளை , வடலிவிளை ,கடம்பன் குளம் , உன்பரக்குடி தாங்கல்களுக்கும் உரிமை கோரியிருக்கு இருக்க வேண்டும். அல்லது நிர்வாகித்திருக்க வேண்டும்............. அப்படி எதுவும் இல்லை........... இதன் மூலம் இவர்கள் வைகுண்டரின் வாரிசு என்று கூறுவது சரியில்லை......... வழக்கு என்று வந்துவிட்டால் வழக்குக்கு என்ன ஆவணங்கள் கொடுக்கப்படுகிறதோ, அதை வைத்துதான் விசாரிப்பார்கள் ......... இவர்கள் வைகுண்டரின் வாரிசு என்று அகிலத்திரட்டுக்கு புறம்பான தகவல்களை நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது........... அவர்கள் சுவாமிதோப்பை வைத்து ஆளட்டும் , அதில் நமக்கு கருத்து பேதம் இல்லை........... யார் யார் பணிவிடை செய்ய வேண்டும் என்பதை கர்த்தன் வைகுண்டர் தீர்மானிப்பது................ ஆரம்ப காலத்தில் நீதி மன்றத்தில் அகிலத்திரட்டுக்கு புறம்பான தகவல்கள் கூறியுள்ளதால் , அகிலத்திரட்டின் படி தீர்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது......................... அந்த அகிலத்திரட்டுக்கு புறம்பான தகவல்களை காப்பாற்றவேண்டி மேலும் பல அடுக்கடுக்கான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரவ விடுகிறது, அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு எதிரானது.......... இனியும் அவர் இது போன்ற அவதூறு செய்திகளை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் என்பது உண்மை........... இது மகாவிஷ்ணுவின் நிரூபம்... என்று சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்......... அன்பர்களே “வல்லாரை மூலிகையை” உண்டால் உடல் நலத்திற்கு நலம்............... ஞாபக சக்தி வரும்............. “ஊமத்தங்காயை” உண்டால் புத்தி பேதலிக்கும்............ மரணமும் வரும் ............... வாழ்வு இருக்காது.............. இங்கே விதைக்கப்படும் “நஞ்சு” சம்பூர்ணன் [முத்துக்குட்டி] கடவுள் ஆனான் என்ற ஊமத்தங்காய்................முத்துக்குட்டி சிவனுக்கு மூலவனன் ஆனான்....... இப்படி நஞ்சை விதைப்பது மூலம் ஒரு வழிபாடே நிலைத்தடுமாறி நிற்கிறது............ வல்லாரை என்னும் மூலிகை “நாராயண்ரே வைகுண்டர்” என்பது.............. அவ்வாறு நினைத்து வழிபட்டால் வாழ்வு உண்டு............ அன்பர்களே இனி மற்றும் ஒரு சமயத்தில் மனதின் தோன்றல்களை கர்த்தன் அரியின் அருளால் பகிர்ந்து கொள்கிறேன்......................................... ஆர்.டி. சிவகுமார்............. 30 – 07 - 2015. …………………………... அய்யா உண்டு.............................

 
 
 
     

sivanarayana

கலியனை -மூவராலும் முன்நின்று கொல்ல இயலாது-ஏன்?

அய்யாவழி மக்கள் கண்ணாடியை வழிபடவில்லை

எதிர்காலத்தில் ஆய்வு செய்பவர்கள் இது உண்மை என்று அவர்கள் நூலில் பதிவு செய்வார்கள்..............

 
 Visitors  : 1888