பதிவுகள்

அகிலத்திரட்டில் ராமாயணம்

அகிலத்திரட்டில் மஹாபாரதம்

அகிலத்திரட்டில் நரசிம்ம அவதாரம்

அகிலத்திரட்டில் கந்தன் அவதாரம்

அகிலத்திரட்டில் மாகாளி கதை

  பதிவுகள்  

கலியனை -மூவராலும் முன்நின்று கொல்ல இயலாது-ஏன்?

பஞ்ச பாண்டவர்களுக்கு உதவி செய்த பின்பு,கலிநீசன் வந்ததும் நாராயணர் பதறி ஓடுவதைக்கண்ட கலைக்கோட்டு முனியும் "இப்போம் நீர் ஓடுகிறீர் இவனை வதைப்பதற்கு எப்போம் நீர் வருவீர் இசையும் " -என்று நாராயணரிடம் கேட்டார்.அதற்கு நாராயணரும், கலியனைப்பற்றி கூறும்போது "மூவராலும் முன்நின்று கொல்ல இயலாது " என்று கூறுகிறார். கலியழிக்க நாராயணர் இயலாதவரா? மகாவிஷ்ணுவைப்பற்றி தேவர்கள் புகழ்ந்து கூறும் போது, "ஈசர் கொடுத்த ஏதுவரம் ஆனாலும் வேசமிட்டு கொல்ல ஒரு பொருளாய் நின்றோனே " கடுதவம் செய்யும் அரக்கர்கள் கேட்கும் எல்லாவற்றையும் சிவன் கொடுத்துவிடுவார்.அரக்கர் பெறும் வரத்திற்கு ஏற்ப பலவேடம் பூண்டு அரக்கர்களை அழிப்பது மகாவிஷ்ணுவின் திறமை ஆகும். அப்படி இருக்க கலியழிக்க மகாவிஷ்ணுவால் முடியாதா? ஒவ்வோரு யுகத்திலும் அரக்கர்கள் வாங்கிய வரத்திற்கு ஏற்ப அரக்கர்களை நாராயணர் அழித்தார். ஐந்துமுகம் கொண்டவர்களால் அழிக்க முடியாத வரம் சூரன் வாங்கினான்.நாராயணர் ஆறுமுகமாக வடிவம் கொண்டு சூரனைக்கொன்றார். இரணியனும் "உலகில் பண்ணிவைத்த உற்ற ஆயுதத்தாலும் இதற்கு முன்னர் பிறந்த எவராலும் என்னை கொல்லக்கூடாது" என்று வரம் வாங்கி இருந்தான்.நாராயணரும் அதற்கு ஏற்றவாறு இதற்கு முன்பு எவரும் பிறக்காத வகையில் சிங்கமுகமும் மனித உடலும் கொண்டு தன் நகத்தையே ஆயுதமாக்கி இரணியனை அழித்தார் இப்படி ஒவ்வோரு யுகத்திலும் ஒவ்வொரு விதமாக அரக்கர்களை அழித்தார். கலியுகத்தில் கலியன் சிவனிடமிருந்தவரம் வாங்கி வரும் போது மகாவிஷ்ணுவும் பண்டார வேடத்தில் அவனை வழிமறித்து "நீ வாங்கிய வரங்களை தா, தராவிட்டால் என்னிடம் சண்டைக்கு வா" என்று கூற.னார். கலியனும் "வரத்தை தரமாட்டேன் பண்டாரத்தை அடிக்க மாட்டேன் "என்று கூறினான். "பண்டாரத்தை அடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்து தா " என்று மகாவிஷ்ணு கேட்டார். கலியனும் சத்தியம் செய்து கொடுத்தான்."சத்தியத்தை மீறினால் என்ன தண்டனை உனக்கு என்று உன் வாயால் சொல்" என்று பண்டார வடிவில் மகாவிஷ்ணு கேட்டார். அதற்கு கலியனும் "ஆணையை மீறி ஆண்டிகளை அடித்தால் வீணாக போகும் என்வரங்கள் விட்ட வாதையுடனே தானாக வந்த தந்திரங்களும் தோற்று பெண் தோற்று நானும் பெற்ற வரமும் தோற்று மண் தோற்று வாழ்வு மக்கள் கிளை தோற்று சேனைத் தளம் தோற்று சீமை அரசும் தோற்று ஆனை படை தோற்று அரசுமேடை தோற்று என்கிளை தோற்று எந்தன் உயிரோடு வன் நரகில் போவேன் "-என்று சொல்லி சத்தியம் செய்து கொடுத்தான்.கலியன் தனக்கு தானாகவே சுயதீர்ப்பு எழுதினான். இப்பொழுது பண்டாரமாக நாராயணர் கலியனிடமிருந்து அடிவாங்க வேண்டும்.அப்பொழுது தான் கலியன் தான் பெற்ற வரங்கள் தோற்று தானாக நரககுழிக்கு போவான்.பூமியில் கலியன் மிகவும் பக்தி உடையவனாக படைக்கப்படுகிறான்.அவன் பண்டாரத்தை பேணி காப்பவனாகவே இருக்கிறான்.கலியன் முன்பு சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் தோன்றி அவனை எதிர்த்தால் அவன் மும்மூர்த்திகளின் காலில் விழுந்து விடுவான்.அவர்களின் காலில் கலியன் விழுந்து விட்டால் கலியனை அழிக்கவே முடியாது. இப்பொழுது மகாவிஷ்ணுவிற்கு ஒரு சவாலான விஷயம்,எப்படி பண்டாரமாக இருந்து கலியனிடம் அடி வாங்குவது என்று ?கலியன் எந்த காலத்திலும் பண்டாரத்தை அடிக்காதவனாக இருக்கிறான். மகாவிஷ்ணு தனது அவதார சடலத்துக்குள் (பரமாயக்கூடசூட்சும உடல்) சம்பூரணத்தேவன் உயிரை வைத்து பூமியில் பிறவி செய்கிறார்.அவர்விதி கர்மப்படி அடுத்தவரின் மனைவியான பரதேவதையுடன் தொடர்பு ஏற்படுகிறது.அதற்கு பின்பு சம்பூரணத்தேவனுக்கு கொடிய நோய் ஏற்படுகிறது.அவர் நோய் தீர்ப்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச்செல்லப்படுகிறார் அங்கு வைத்து "அப்படி முனிமார் கூட்டி அப்பதி எல்லாம் காட்டி முப்படி உவர் பதியில் முறைபோல் உயிரை வத்து விட்டு அப்படி சடலந்தன்னை அறமதால் பூசித்தேய்த்து செப்பியபடியே வர செகலினுள் அகமே சேர்ந்தார் மாயன்" சம்பூரணத்தேவன் உயிரை உவர் பதியில் எடுத்து வைத்துவிட்டு ( திருச்செந்தூரில் வைத்து சம்பூரணத்தேவன் இறந்து விடுகிறான் இத்துடன் சம்பூரணின் கதை முடிகிறது) சுத்தப்படுத்திய தன அவதார சடலத்தை மகரத்துக்குள் அழைத்துச்சென்றார். மகரத்துக்குள் தன் அவதார சடலத்துக்குள் சிவனும் நாராயணரும் மறைபொருளாக பிரம்மனும் இணைந்து வைகுண்டராக உயிர்பித்தார் நாராயணரும்., வைகுண்டரும் பிறக்கிறார். வைகுண்டருக்கு விஞ்ஞை உபதேசம் நாராயணர் கொடுக்கிறார்.வைகுண்டர் கடல் கரைக்கு வருகிறார். தனது அவதார உடலை வளர்த்த தாய்க்கு காட்சி கொடுக்கிறார்.பின்பு தருவைக்கரை வந்து சம்பூரணனின் மனு உருவமான முத்துக்குட்டி உருவத்தில் தெட்சணத்துக்கு வருகிறார். வைகுண்டரும் தெட்சணத்துக்கு வந்து மண்ணும் தண்ணீரால் மக்களுக்கு நோய் தீர்த்தார்.பல அதிசயங்களும் அற்புதங்களும் செய்தார்.குறோணியின் ஆறாவது துண்டிலிருந்து வந்த கலிமன்னன் வைகுண்டரை கைது செய்கிறான் கலிநீசன் நாராயணருக்கு இழைத்த கொடுமைகள நீசர்கள் கயிறு கொண்டு நாராயணர் வைகுண்டரை கையை கட்டி அவரை கீழே தள்ளி துப்பாக்கி தடியினால் இடித்து அவரது பொக்கனத்தை கிழித்து,ஆடையை கிழித்து நாராயண வைகுண்டரின் சுரைக்கூட்டை தகர்த்து தலைமுடியை பிடித்து தாறுமாறாக இழுத்து குண்டியிலே குத்தி குனியவிடுவான் ஒருவன் துப்பாக்கி கைப்பிடியை வைத்து சுவாமியின் மேலெல்லாம் இடித்து தலையைபிடித்து அங்கும் இங்கும் ஆட்டி பிடித்து தள்ளி விடுவான் வழி நெடுவே நடக்க நடக்க நீசர்கள் எல்லாம் கல் கொண்டு எறிந்தனர்.சூசீந்திரத்தில் சிறுநீர் கழிக்கும் அறையிலெ அடைக்கப்பட்டார். சாராயத்தில் ஐந்துவகை நஞ்சு கலந்து பால் என்று கொடுக்கப்பட்டது.அந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை.மிளகாய் வற்றல் அறையில் அவரை அடைத்து தீ வைத்தனர்.சுண்ணாம்பு நீற்றுகின்ற காலவாயில் வைத்து அவரை துன்புறுத்தினர்.நாராயண வைகுண்டர் மீண்டு வந்தார்.இறுதியில் கடுவாய்ப்புலியை விட்டு வைகுண்டரை கொல்ல ஆணை பிறப்பித்தான்.அதிலே தோல்வியும் காண்கிறான். இவன் கடவுளாக இருப்பாரோ என்று நினைத்து வைகுண்டரை சோதனை செய்து பார்க்கிறான்.தன் கைவிரலில் இருக்கும் மோதிரத்தை கழற்றி கைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கைக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டான்.வைகுண்டரும் மோதிரம் என்று உண்மையை சொன்னால் அவன் நம்மை கடவுள் என்று கொண்டாடுவான்.நாம் வந்த நோக்கம் நிறைவேறாது என்று என்னி தலை கவிழ்ந்தே நின்றார்.பின்பு பல வழிகளிலும் வைகுண்டரை கொடுமை செய்தான்.இவர் கடவுளா என்று அறிந்துகொள்ள வேண்டி சோதிடனை அழைத்துக்கேட்டான்.அதற்கு சோதிடனாலும் தெளிவாக சொல்ல முடியவில்லை. இவ்வாறு கலியன் செய்த சத்தியத்தின் படி பண்டாரத்தை அடித்தால் தான் தோற்று பெற்ற வரங்கள் தோற்று நரககுழிக்கு போவேன் என்று சொன்னதற்கு ஏற்ப நாராயணரே பண்டாரமாக வந்து கலியனிடம் அடிவாங்கி கலியன் நரகக்குழிக்கு போக வழிவகுத்தார். மன்னனும் சம்பூரணத்தேவனின் மனு உருவமான முத்துக்குட்டியை பற்றி விசாரிக்கிறான். அடுத்தவரின் மனைவி பரதேவதையின் தொடர்பு பற்றி அறிந்து கொள்கிறான்.கலிமன்னன் முத்துக்குட்டி தான் வைகுண்டர் என்று நம்புகிறான்.இவன் போலி சாமியார் என்று திடமாக நம்புகிறான்.பெண் தொடர்பு உடையவன் பண்டாரமாக இருக்க மாட்டான் என்று மன்னன் நம்புகிறான். உயிர்மாற்றப்பட்ட விஷயம் யாது ஒரு நபருக்கும் தெரியாது.ஆங்கில கிறிஸ்தவர்களும் வைகுண்டரை பற்றி,விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லி ஒருவன் இருக்கிறான்.அவன் பெயர் முத்துக்குட்டி அவன் நம் மதமாற்றத்திற்கு தடையாக இருக்கிறான் என்று பதிவு செய்தார்கள்.இவ்வாறு சிவன் கொடுத்த வரத்தின்படி யுகத்திற்கு யுகம் நாராயணரே உத்தமனாக வந்தார். "நாமுன்னின்று கொல்ல ஞாயம் இல்லையே கலியனுட கண்ணு கண்டால் பாவம் கூடும் திலியன் அவனை செயிக்க ஏலாது எவராலும் முன்னின்று கொல்ல மூவராலும் ஏலாது பின்னின்று அவனை பேசாமல் மாழ வைப்பேன் வல்லமையும் காட்டேன் மாநீசன் கண்முன்னே நில்லாமல் நின்று நீசன் தனை அறுப்பேன் அற்புதம் செய்யேன் அந்நீசன் கண்முன்னே உற்பனமாய்க் கொன்று ஒன்றறியா நின்றிடுவேன் வந்தேன் எனச் சொல்வார் வரவில்லை என்றிடுவார் எந்தன் பேரோ காணாது யாரோ எனச் சொல்லிடுவார் இதோ வந்தார் என்பார் இவன் இல்லை என்றிடுவார் அதோ வந்தார் என்பார் அவன் இல்லை என்றிடுவார் இபபடியே சூட்சம் ஒன்று எடுப்போம் கான் மாமுனியே எப்படியும் உள் அறிவோர் எனை அறிவோர் மாமுனியே அறிந்தோர்கள் அறிவார் அறியாத பேர் மாழ்வார் தெரிந்தோர்கள் வாழ்வார் தெரியாத பொய்யர் மாழ்வார் " இப்பொழுது புரிகிறதா கலியழிக்க மகாவிஷ்ணு வல்லமை உடையவர் என்று. "எந்தன் பேரோ காணாது யாரோ எனச் சொல்லிடுவார்" என்பதற்கு ஏற்ப மகாவிஷ்ணுவின் பெயர் மறைக்கப்பட்டு முத்துக்குட்டி தான் ஞானம் பெற்று வைகுண்டராக ஆனார் என்ற செய்தி உலக பதிவாக உள்ளது.

 
 
 
     

sivanarayana

அய்யாவழி மக்கள் கண்ணாடியை வழிபடவில்லை

சுவாமிதோப்பு வெறும் குடும்ப கோவிலாக மட்டும் இருந்தால் நான் ஒன்றும் சொல்ல முடியாது........ஆனால் தமிழக அரசு விருப்ப விடுமுறை விடுகின்ற ஒரு தலமாக சுவாமிதோப்பு ஆகிவிட்டது..............

எதிர்காலத்தில் ஆய்வு செய்பவர்கள் இது உண்மை என்று அவர்கள் நூலில் பதிவு செய்வார்கள்..............

 
 Visitors  : 717