தொடர்புக்கு

 
 
     
         
 

பதிவுகள்

அகிலத்திரட்டில் ராமாயணம்

அகிலத்திரட்டில் மஹாபாரதம்

அகிலத்திரட்டில் நரசிம்ம அவதாரம்

அகிலத்திரட்டில் கந்தன் அவதாரம்

அகிலத்திரட்டில் மாகாளி கதை

  முகவுரை  

அய்யாவழி மக்கள் கண்ணாடியை வழிபடவில்லை

அய்யா, நாம் கண்ணாடியை வழிபடவில்லை. கண்ணாடிக்கா நாம் வெஞ்சாமறை வீசுகிறோம்.? கண்ணாடியையா நாம் வாகனத்தில் ஏற்றுகிறோம்?. இல்லை..............எனவே நாம் கண்ணாடியை வணங்க வில்லை. இந்து மதத்தில் மூன்று விதமான வழிபாடு உண்டு. 1 – ரூபவழிபாடு........... உருவங்களை [சிலை]வைத்து வழிபடுவது. 2 – ரூபாரூபவழிபாடு........ உருவம் இருந்தும் முழுமையான உருவம் இல்லாமலும் இருப்பதை வைத்து வழிபடுவது.[சிவலிங்கம்]. 3 – அரூபவழிபாடு.........சிலை எதுவும் இல்லாமல் வழிபடுவது. இதில் கனி வகைகள் வைத்து திரு விளக்கு ஏற்றி வழிபடுவதாகும். அய்யாவழி வழிபாட்டில் ஒரு ஆசனம் அமைத்து, அதில் வேல் வைத்து, ஆசனத்தில் காவி உடை போர்த்தி, வேலோடு சேர்த்து உத்திராட்ஷை, பிச்சிப்பூ மாலை அணிவித்து ஆசனத்தில் இருந்து வலது பக்கம் சுரக்கூடு மற்றும் பிரம்பு வைத்து, ஆசனத்தின் முன்பக்கமாக திரு விளக்கு ஏற்றி வைத்து, ஆசனத்தில் வைகுண்டர் அமர்ந்துள்ளார் என்று மானசீகமாக நினைத்து வழிபடுவதாகும். எனவே இது ரூபாரூபவழிபாடு வகையில் சேரும் வழிபாட்டில்.............. பள்ளியறையை அலங்கரித்து திரு விளக்கு ஏற்றி கனி வகைகளை வைத்து , பிச்சிப்பூ வைத்து, பன்னீர் தெளித்து, திரு நடை திறந்து, சங்கு, மணி நாதம் முழங்க, பணிவிடையாளர் உகப்படிப்பு சொல்ல அதை கேட்டு மக்களெல்லாம் திருப்பி சொல்ல, உகப்படிப்பு முடிந்ததும் மாப்புக் கேட்ட பின்பு அனைவருக்கும் திருநாமம் கொடுக்கப்படும். இந்த வழிபாடு முறையானது அய்யா வைகுண்டரால் வடிவமைக்கப் பட்டது. அய்யாவழி வழிபாட்டில் வடக்கு வாசலில் அருள் பாலிப்பது யார்? எல்லா அய்யா வழிபாடு தலத்திலும் வடக்கு வாசல் வைத்திருப்பார்கள். அல்லது வடக்கு பக்கம் ஒரு விளக்கு வைத்திருப்பார்கள். வடக்கு பக்கம் பத்ரகாளிக்கு உரியது. தக்கன் என்ற அரக்கனை ஆணும் அழிக்க முடியாது, பெண்ணும் அழிக்க முடியாது. ஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது என்ற நிலை இருந்தது . இதை அறிந்த சிவன் வட கைலையில் இருக்கும் காளியை வரவழைத்தார். வடகைலையில் இருந்ததினால் “வட பத்ரகாளி” என்ற பெயரும் அம்மைக்கு உண்டு. ஒரு ஆலையத்தில் இரண்டு இடத்தில் மூலவர் அருள் பாலிப்பதில்லை. அய்யா வழிபாடு தலத்தில் மூலவராக வைகுண்டரும், வடக்கு பக்கம் பத்ரகாளிக்கும் உரியது. சுவாமிதோப்பு பொறுத்த வரையில் வடக்கு வாசல் இடத்தில் அய்யா தவம் இருந்த இடமாக இருந்தாலும் மூலவராக வைகுண்டர் ஆனபின்பு வடக்கு வாசல் அம்மை பத்ரகாளிக்கே............ வடக்கு வாசல் அருகே அம்மையின் அருள் கொண்டு ஆராசனையாக இருப்பவர்களை பார்க்கலாம்........... அம்பல பதியில் வடக்கு வாசலில் அம்மைக்கு மணி புடவை எடுத்து வைத்து வழிபடுவதை நேரில் பார்க்கலாம்.

 
     
 
 Visitors  : 2290